கூட்ட நெரிசலை தவிர்க்க கொரோனா தடுப்பூசிக்கு டோக்கன் சப்ளை

திருப்பூரில், கொரோனா தடுப்பூசி போடும் இடத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏதுவாக, தடுப்பூசிக்கு டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்கும் வகையில் மாவட்ட சுகாதார துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளனர். கொரோனாவில் தப்பிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசிக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திற்கு 13 ஆயிரத்து 930 கோவிஷீ்ல்டு டோஸ்கள் வந்துள்ளன. அரசு மருத்துவமனை மற்றும் சுகாதாரநிலைங்களுக்கு, அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.
டோக்கன் அடிப்படையில் பொது மக்கள் தங்களுக்கான கால நேரத்தில் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!