சாக்கு குடோன் தீவிபத்து. ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

சாக்கு குடோன் தீவிபத்து.  ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
X
திருப்பூரில் சாக்கு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

திருப்பூர் செரீப் காலனியில் பழனிச்சாமி என்பவர் சொந்தமாக சாக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். சாக்கு கடையின் மேற்கூரையில் திடீரென தீப்பிடித்து மளமளவென தீ கடை முழுவதும் பரவியது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் தீயணைப்புத்துறையினர் வர தாமதமானதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்த தண்ணீரை ஊற்றி ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. தீ விபத்து குறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!