வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியது

வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியது
X
திருப்பூரில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கப்பட்டு அனுப்பும் பணி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழ்நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் செவந்தாம்பாளையம் பகுதியில் உள்ள தெற்கு தாலுகா அலுவலகத்தில் சீலிடப்பட்ட அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலரான விஜய கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், பரிசோதிக்கப்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பும் பணி துவங்கியது. திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் இருந்து 4350 விவிபேட் இயந்திரங்கள் பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்றது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது