லாரி- மோட்டார்பைக் மோதி விபத்து, 2 பேர் பலி

லாரி- மோட்டார்பைக் மோதி விபத்து, 2 பேர் பலி
X

திருப்பூரில் கான்கிரீட் கலவை கலக்கும் லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள தாடிக்கார்முக்கு பகுதியில் மோட்டார்பைக்கில் வந்து கொண்டிருந்த வேலுச்சாமி மற்றும் கருணாநிதி ஆகியோர் சாலையை கடப்பதற்காக மோட்டார்பைக்கில் இருந்தபடி நின்று கொண்டிருந்த நிலையில் அவ்வழியே வந்த லாரி மோட்டார்பைக்கின் மீது மோதியதில் நிலைதடுமாறி வேலுச்சாமி மற்றும் கருணாநிதி ஆகிய இருவரும் லாரியின் பின்பக்க சக்கரத்தில் விழுந்ததில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .

இது குறித்து அறிந்ததும் அங்கு உடனடியாக வந்த போலீசார் இறந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

  • 1
  • 2

  • Next Story
    ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!