திருப்பூரில் வெண்கல சிலைகள் பறிமுதல்

திருப்பூரில் வெண்கல சிலைகள் பறிமுதல்
X

திருப்பூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய உரிமம் இல்லாமல் எடுத்து சென்ற வெண்கலச்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள குளத்துபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த வாகனத்தில் உரிய உரிமம் இல்லாமல் எடுத்து சென்ற சுமார் 60 கிலோ வெண்கல சிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

ஆனால் அதற்கு உரிய உரிமம் இல்லாத காரணத்தால் தேர்தல் பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்து திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். திருப்பூரில் இருந்து பெங்களூரு கொண்டு செல்வதற்காக எடுத்து செல்லப்பட்டதாக வாகனத்தை ஓட்டி வந்த முகமது ரசூல் தெரிவித்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் கார் ஆகியவை திருப்பூர் வடக்கு காவல்நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. உரிமம் இல்லாமல் எடுத்து சென்ற சிலைகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story