உரிமம் இல்லாத துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம்

உரிமம் இல்லாத துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம்
X
துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம். முயல்வேட்டைக்கு பயன்படுத்திய உரிமம் இல்லாத 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்!! 4பேர் கைது!!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி நியூ திருப்பூர் கருப்பராயன் தோட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (29) மரம் அறுக்கும் தொழிலாளி. இவரது நண்பர்களான பழங்கரை வேலூரைச் சேர்ந்த மகேந்திரன் (35). பழங்கரை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த சந்துரு (30). இவர்கள் 3 பேரும் முயல் வேட்டையாடுவதற்காக நேதாஜி ஆயத்த ஆடை பின்புறம் உள்ள சொக்கன் குட்டை வனப்பகுதிக்கு நாட்டுத் துப்பாக்கியுடன் கடந்த பிப்ரவரி 28ம் தேதி சென்றனர். வனப்பகுதியில் முயலை வேட்டையாடுவதற்காக மகேந்திரன் துப்பாக்கியில் வெடி மருந்தை நிரப்பி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்த குண்டு எதிரே நின்ற முருகேசனின் இடது தோள் பகுதியில் பாய்ந்தது. இதில் முருகேசன் பலத்த காயம் அடைநது சுருண்டு விழுந்தார். அதிர்ச்சி அடைந்த இருவரும் முருகேசனை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் வனப்பகுதியில் குண்டு பாய்ந்து கிடந்த முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தப்பி ஓடியவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய மகேந்திரன், சந்துரு, மனோகரன், ராஜ்குமார், ஆகிய நால்வரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து உரிமம் இல்லாத 3 நாட்டுத்துப்பாக்கி, வெடிமருந்து, மற்றும் குண்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ராசிபுரத்தில் வள்ளலாா் சுத்த சன்மாா்க்க சங்கம் சாா்பில் 49 ஆம் ஆண்டு தைப்பூச அன்னதானப் பெருவிழா