மாணவன் தற்கொலை- பள்ளியை பெற்றோர் முற்றுகை

மாணவன் தற்கொலை- பள்ளியை பெற்றோர் முற்றுகை
X

திருப்பூரில் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு தனியார் பள்ளியே காரணம் என பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் பனியன் வேஸ்ட் துணி விற்பனை செய்து வருகிறார். இவரது மகன் தேவா மணிகண்டன்(16). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சரியாக படிக்கவில்லை என கடந்த வியாழக்கிழமை அன்று தந்தை குமாரை பள்ளிக்கு அழைத்து புகார் கூறியுள்ளனர்.இதில் மாணவன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். அன்று மாலை வீடு திரும்பிய மாணவர் வீட்டில் உள்ள அறையில் படிக்க சென்றுள்ளார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததை அடுத்து கதவை உடைத்து பார்த்த போது மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது தொடர்பாக திருமுருகன் பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மகனின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் எனவும் பள்ளியில் கொடுத்த அழுத்தம் காரணமாகவே தங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டார் எனவும் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி இறந்த மாணவனின் பெற்றோர் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!