கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்

கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் கால் டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் கூறுகையில், தமிழகத்தில் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. விலையை குறைக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கால்டாக்சி கட்டணத்தை உயர்த்தி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூரில் சுமார் 500க்கும் மேற்பட்ட கால் டாக்சி ஓட்டுநர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு இந்தப் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!