திருப்பூரில் சாலை விபத்தில் பெண் பலி

திருப்பூரில் நடந்த சாலை விபத்தில் பெண் பலியானார். இது குறித்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி அருக்காணி தம்பதியினர் நேற்று இரவு பணி முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது முருகம்பாளையம் கோடீஸ்வரர் சந்திப்பை கடக்கும் போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை இடதுபுறமாக கடக்க முயன்றனர். அப்போது எதிரே நபர் வருவதை அறிந்து வேலுச்சாமி வாகனத்தை நிறுத்த முற்பட்டார். ஆனால் வாகனம் வலது புறமாக சாய்ந்தது. அப்போது அருகில் சென்று கொண்டிருந்த லாரியின் பின் சக்கரத்தில் இருவரும் விழுந்த நிலையில் அருக்காணியின் மேல் லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது.
இதனால் அருக்காணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் வேலுச்சாமி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வீரபாண்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லாரியை ஓட்டி வந்த மாடசாமியை கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu