அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவக்கம்
திருப்பூர் மாவட்டம், அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கியது. விழாவினை தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம், அலகுமலையில், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில், 4-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. விழாவுக்கு ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்காக அலகுமலை அடிவாரத்தில் வாடிவாசல் மற்றும் 400 அடி நீளத்தில் வாடிவாசலில் இருபுறமும் பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. வாடிவாசலில் இருந்து வெளியே வரும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு காயம் படாமல் இருக்க தேங்காய் நார் (மஞ்சு)தரையில் தூவப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போட்டியில் 1040 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கு பெற்றுள்ளனர்.
போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்கு போட்டி நடைபெறும் இடத்தை சுற்றிலும் 6 இடங்களில் அகன்ற திரையில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகியவையும் செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu