குடியரசு தினம்: நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

குடியரசு தினம்: நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
X
திருப்பூரில் 72வது குடியரசு தினவிழாவினை முன்னிட்டு தேசியக்கொடியேற்றிவைத்த மாவட்ட ஆட்சியர் 222 பயனாளிகளுக்கு 6 கோடியே 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மறியாதை செலுத்தினார். இதையடுத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். அதன்பின்னர் சமாதான புறா மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டு திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 153 காவலர்கள் மற்றும் கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 97 மருத்துவ மற்றும் சுகாதார துறை ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மாற்று திறனாளிகளுக்கான உதவி தொகை , வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை , உள்ளிட்ட துறைகள் சார்பில் 222 பயணாளிகளுக்கு 6 கோடியே 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!