திருப்பூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி

திருப்பூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
X
Corona vaccination campaign in Tirupur

திருப்பூர் மாவட்டத்தில் நான்கு மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு செலுத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை , தாராபுரம் , உடுமலை அரசு மருத்துவமனைகளிலும் , பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது .

திருப்பூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 13,500 தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு மையங்களிலும் 100 பேர் வரை தடுப்பூசி போடப்படும் எனவும் தடுப்பூசி செலுத்திய பிறகு அந்தந்த மருத்துவமனையிலேயே 30 நிமிடம் கண்காணிப்பில் வைக்கப்பட்டு முழு பரிசோதனைக்கு பிறகு அனுப்பபடுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!