போதையில் போலீஸ் வாகனம் ஓட்டிச் சென்ற வாலிபர் - விபத்தில் சிக்கிய பரபரப்பு!

திருப்பூர் மாநகரில், மதுபோதையில் போலீஸ் வாகனத்தை ஓட்டிய வாலிபர், அதை விபத்துக்குள்ளாக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

திருப்பூர் மாநகரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனத்தை, மது போதையில் இருந்த நபர் ஒருவர், போலீஸாருக்கு தெரியாமல் இயக்க ஆரம்பித்தார். அந்த வாகனத்தை எடுத்துக் கொண்டு, ஊத்துக்குளி ரோட்டில் சென்றார்.

திருப்பூர், கூலிபாளையம் அருகே சென்றபோது, அந்த வாகனம் நிலை தடுமாறி எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து, வாலிபர் விபத்தை ஏற்படுத்தினார். போலீஸ் வாகனம் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காரில் இருந்த அந்த போதை வாலிபரும் காயமடைந்தார்.

உடனடியாக மீட்கப்பட்ட வாலிபருக்கு, 108 ஆம்புலன்ஸில் வந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த நபர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விஜயன்,௩௩ என்பது தெரியவந்தது.

திருப்பூர் போலீஸார் விசாரணைக்காக வாலிபரை அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால், திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!