திருப்பூரில் குழாய் உடைந்து வீணான குடிநீர்- துரிதமாக செயல்பட்ட எம்.எல்.ஏ. செல்வராஜ்!

திருப்பூரில் குழாய் உடைந்து வீணான குடிநீர்- துரிதமாக செயல்பட்ட எம்.எல்.ஏ. செல்வராஜ்!
X

திருப்பூர் பூச்சக்காடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணானது. இதை எம்.எல்.ஏ செல்வராஜ் பார்வயிட்டு, உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார். 

திருப்பூர் மாநகராட்சி 4 வது மண்டலத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது. எம்.எல்.ஏ செல்வராஜ் உடனடியாக செயல்பட்டு, சரிசெய்ய நடவடிக்கை எடுத்தார்.

திருப்பூர் மாநகராட்சி 4,வது மண்டலத்துக்குட்பட்ட கருவம்பாளையம் பகுதியில் உள்ள பூச்சக்காடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பூச்சக்காடு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து, இத்தொகுதி எம்எல்ஏ-வுக்கு பொதுமக்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து எம்எல்ஏ செல்வராஜ், மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரித்து, குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதோடு நிற்காமல், குடிநீர் குழாய் சரி செய்யும் பணியை, மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து சென்று, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர். எம்.எல்.ஏ துரிதமாக செயல்பட்டு, குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வினியோகத்தை சீரமைத்ததை அப்பகுதியினர் பாராட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!