திருப்பூரில் கொரோனா பாதிப்பு 1068; உயிரிழப்பு 8

திருப்பூரில் கொரோனா பாதிப்பு 1068; உயிரிழப்பு 8
X
திருப்பூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 1068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 8 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த நான்கு நாட்களாக தினசரி 100, பேர் வீதம் குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, திருப்பூர் மாவட்டத்தில் 1068, பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 8, பேர் பலியாகி உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் 68, ஆயிரத்து 180, பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 48, ஆயிரத்து765,பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 556,பேர் என்று அதிகரித்துள்ளது. இதுவரை 18, ஆயிரத்து859,பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதற்கிடையில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் 93, இடங்களில் இன்று காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. அவ்வகையில் 6431, காய்ச்சல் பரிசோதனையும், கொரோனா தொற்று தென்பட்ட3296,பேருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!