திருப்பூர் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல்: கொரோனா பாதிப்பு 1000-க்கு கீழ் சென்றது!

திருப்பூர் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல்: கொரோனா பாதிப்பு 1000-க்கு கீழ் சென்றது!
X
திருப்பூர் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் சென்றது; இது, மாவட்ட மக்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நடைமுறையில் உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில், தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயக்கம் காட்டிய நிலையில், தொற்றை தவிர்க்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதை அறிந்து, தற்போது மக்கள் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால், கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது.

மறுபுறம், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கையின் பலனாக தற்போது தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு, 995, ஆக குறைந்துள்ளது. இன்று ஒரேநாளில் 18, பேர் இறந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 70, ஆயிரத்து 213, பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.50, ஆயிரத்து 659,பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் 585,பேர் பலியாகி உள்ளனர். தற்போது மாவட்ட அளவில், 18, ஆயிரத்து 969,பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!