திருப்பூர் மாநகராட்சி தீர்மானங்களை தெரிந்து கொள்ள புதிய வசதி

திருப்பூர் மாநகராட்சி தீர்மானங்களை தெரிந்து கொள்ள புதிய வசதி
X

 ஆணையாளர் கிராந்திகுமார்பாடி

திருப்பூர் மாநகராட்சியின் தீர்மானங்களை தெரிந்து கொள்ள இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்பாடி வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சியில், இதுவரை மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்பூர் மாநகராட்சி இணையதளத்தில் http://www.tnurbantree.tn.gov.in/tiruppur/council-resolution-2/ என்ற லிங்க் மூலம் இணையதளத்தில் தீர்மானங்களை தெரிந்து கொள்ளலாம். திருப்பூர் மாநகராட்சி மாமன்ற தீர்மானங்கள், 2012 ஜனவரி முதல் 2021 மே வரையிலும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!