திருப்பூரில் மது கடத்தி விற்ற 7 பேர் கைது; 341 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருப்பூரில் மது கடத்தி விற்ற 7 பேர் கைது;   341 மதுபாட்டில்கள் பறிமுதல்
X
திருப்பூரில், மது கடத்தி விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்; அவர்களிடம் இருந்து 341 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூர் வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார், முருகம்பாளையம், இடுவம்பாளையம், ஐயம்பாளையம் நால்ரோடு, வஞ்சிபாளையம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் சோதனை செய்தனர்.

இதில் அய்யம்பாளையம் நால்ரோட்டில் சோதனையின்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். இதில், காரில் 230 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. காரை ஓட்டி வந்த ஜே.ஜே. நகரை சேர்ந்த ரவி,31 புளியங்காட்டை சேர்ந்த ஆனந்தன்,32, ஆகிய 2 கைது செய்தனர். மதுபாட்டில்கள் எடுத்து வர பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், அய்யம்பாளையம், வீரபாண்டி பகுதிகளில் மது விற்ற மனோஜ்குமார்,26, சரவணக்குமார்,20, முருகன்,42, பிரதாப்ராவ்,36,மதன்குமார்32 ஆகிய 5 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 111 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை