திருப்பூரில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

திருப்பூரில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
X

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் இன்று தினசரி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆண்களும், பெண்களும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றார்கள்.

மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. . இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு இருந்ததால் நேரம் செல்ல செல்ல மக்கள் குவியத்தொடங்கினார்கள். திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் மீன்கள், இறைச்சி கடைகளிலும் அசைவ பிரியர்கள் குவிந்தனர். திருப்பூர் அரிசிக்கடை வீதியில் மளிகை கடைகள் அதிகம் உள்ளன. மளிகை பொருட்கள் வாங்குவதற்கும் மக்கள் கூட்டமாக வந்திருந்தனர். முழு நேர ஊரடங்கு என்பதால் தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர். பொது மக்கள் கூட்டம் காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!