கொரோனா விதிமீறல்: திருப்பூர் மாநகராட்சியில் ரூ.8.75 லட்சம் அபராதம் வசூல்!

கொரோனா விதிமீறல்: திருப்பூர் மாநகராட்சியில் ரூ.8.75 லட்சம் அபராதம் வசூல்!
X
திருப்பூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும், கொரோனா விதிமீறலுக்காக ரூ.8.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். மாநகரப்பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வகையில், தினசரி 16 க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று மக்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என ஆய்வு செய்யப்படுகிறது.

இதுதவிர திருப்பூர் மாநகர பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் அந்த பகுதியை விட்டு வெளியே வந்தால் அவர்களுக்கு ரூ.2,000 அபராதமும், மாஸ்க் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு ரூ.200 வரை அபராதமும் விதிக்கப்பட்டது. அவ்வகையில், மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும், கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு தொடங்கியது முதல், இதுவரை ரூ. 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!