எமர்ஜென்சி கால அனுபவங்களை பகிர்ந்த மேகாலயா முன்னாள் ஆளுநர்: திருப்பூரில் பாராட்டு விழா

எமர்ஜென்சி கால அனுபவங்களை பகிர்ந்த மேகாலயா முன்னாள் ஆளுநர்:  திருப்பூரில் பாராட்டு விழா
X

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில்,எமர்ஜென்சி காலத்தில் திருப்பூரில் இருந்து பங்கேற்ற மூத்த நிர்வாகிகள் கருப்பசாமி மற்றும் பழனிசாமி, சுவாமிநாதன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். 

திருப்பூரில், பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், நெருக்கடி கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் வீடியோகான்பரன்ஸ் மூலம் சிறப்பு கூட்டம், மாவட்டத் தலைவர் செந்தில்வேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, மேகாலயா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர், நெருக்கடி கால நினைவுகள், அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பாஜக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எமர்ஜென்சி காலத்தில் திருப்பூரில் இருந்து பங்கேற்ற மூத்த நிர்வாகிகள் கருப்பசாமி மற்றும் பழனிசாமி, சுவாமிநாதன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர்கள் கே.சி.எம்.பி. சீனிவாசன், கதிர்வேல், மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, இளைஞர் அணியின் மாவட்ட தலைவர் அருண், சமூக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மோதிலால், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட துணை தலைவர் சி.பி. சுப்பிரமணியம் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் நரேன் பாபு நன்றி கூறினார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!