திருப்பூரில் பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
X

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற பெண் வக்கீல்கள். 

Tirupur News,Tirupur News Today- மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி, திருப்பூரில் பெண் வக்கீல்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் பெண் வக்கீல்கள் சார்பில், இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.

'மணிப்பூர் மகள்களை பாதுகாப்போம்' என்ற முழக்கத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. வக்கீல்கள் தமயந்தி, முத்துலட்சுமி, திங்களவள், சத்தியா, இந்திராகாந்தி, மோகனாம்பாள், சவுமியா ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த பெண் வக்கீல்கள், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அங்கு அமைதி திரும்ப, தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். பெண்கள் மீதான வன்கொடுமைகளை செய்த குற்றவாளிகளை கைது செய்து சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பதாகைகளை உயர்த்தி பிடித்தபடி கோஷங்கள் எழுப்பினர். இதில் திரளான பெண் வக்கீல்கள் பங்கேற்றனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, தேமுதிக ஆர்ப்பாட்டம்

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில், இன்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் குழந்தைவேல், வடக்கு மாவட்ட செயலாளர் பிரசாத்குமார், தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

தமிழக மக்களை வாட்டி வதைக்கிற விலைவாசி உயர்வை கண்டித்தும், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நதிநீரை திறக்க வேண்டும், விவசாய விளைநிலங்களை அழித்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டிப்பது, மின்கட்டண உயர்வால் நலிவடைந்து வரும் திருப்பூர் பின்னலாடை தொழிலை பாதுகாக்க, மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும், தொழிலாளர்களுக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தக் கோரியும், மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்ளாத திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை மாநில துணை செயலாளர் பொன் இளங்கோவன், கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ்.அக்பர் ஆகியேரர், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். இதில் தேமுதிகவினர் திரளாக கலந்துகொண்டனர்.

Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து