வீரபாண்டி பிரிவு பகுதியில் வாகனங்கள் ஆக்கிரமிப்பு; நெரிசலால் மக்கள் கடும் அவதி
Tirupur News,Tirupur News Today- வீரபாண்டி பிரிவில் வாகனங்கள் ஆக்கிரமிப்பால் நெரிசல்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் அருகே விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையை ஆக்கிரமித்து, வாகனங்கள் நிறுத்தப்படுவதால் தினமும் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ்கள் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் ரோடு எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்த சாலையாகும். வீரபாண்டி பிரிவில் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் சாலை குறுகலாக இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் கடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால் வீரபாண்டி பிரிவு நான்கு சாலை சந்திப்பு பகுதியில் 150 மீட்டர் நீளத்துக்கு 1. 5 மீட்டர் முதல் 4மீட்டர்அகலத்திற்கு ரூ. 95 லட்சம் மதிப்பீட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் விரிவாக்கம் செய்யப்பட்ட பின்பு சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சாலை விரிவாக்கம் செய்தும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.
போக்குவரத்து நெரிசல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவ ரத்து நெரிசலில் தினந்தோறும் சிக்கி தவிக்கின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கைமேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல்வேறுதரப்பினரும் கடும் மனஉளைச்சலுக்கும், அவதிக்கும் ஆளாகி வருகின்றனர்.
வீரபாண்டி பிரிவில் பஸ்கள் நிறுத்தத்திற்கு ஒதுக்கிய இடத்திலும் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த வழியாக தினந்தோறும் கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மேயர் உள்ளிட்டோர் பயணம் செய்கின்றனர். வீரபாண்டி பிரிவில் தான் தெற்கு வட்டார போக்குவ ரத்து அலுவலகம் மற்றும் வாகன சோதனை சாவடி மையமும் இருக்கிறது. ஆனால் ஆக்கிரமிப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒன்று இணைந்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu