பயன்பாடற்ற வாகனங்கள் ரூ. 68 லட்சத்துக்கு ஏலம்

திருப்பூர் மாநகராட்சியில், பயன்பாடு இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், 68 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி, முதல் மண்டல பகுதியில் சுகாதார பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த 10 டிப்பர் லாரி, 4 கன்டெய்னர் லாரி, ஒரு கழிவுநீர் உறிஞ்சும் டேங்கர் லாரி மற்றும் நான்காவது மண்டல பகுதியில் பயன்படுத்தப்பட்டு வந்த 15 வாகனங்கள் என 30 வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
பயன்பாடு இல்லாத வாகனங்கள் அந்தந்த மண்டல அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இவற்றை ஏலம் விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. நேற்று நடந்த ஏலத்தில், 68 லட்சம் ரூபாய்க்கு காலாவதி வாகனங்கள் ஏலம் போயின. ஏலம் விடப்பட்டதால், மண்டல அலுவலக வளாகத்தில், பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், அங்கிருந்து அப்புறபடுத்தப்பட்டு எடுத்து செல்லப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu