ஓணம் பண்டிகை ஆடை வர்த்தகம்; பின்னலாடை உற்பத்தியாளர் மகிழ்ச்சி

ஓணம் பண்டிகை ஆடை வர்த்தகம்; பின்னலாடை உற்பத்தியாளர் மகிழ்ச்சி
X

திருப்பூரில், ஓணம் பண்டிகை ஆடை கொள்முதல் அதிகரித்தது.

ஓணம் பண்டிகைக்கான ஆடை கொள்முதலில், கேரள வர்த்தகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வரும் செப்டம்பர் 8ல் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகை கால விற்பனைக்காக கேரள வர்த்தகர்கள், கடந்த இரண்டு வாரங்களாக, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களிடமிருந்து அதிகளவில் ஆடைகளை கொள்முதல் செய்கின்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான ஆடைகள் அதிகளவில் திருப்பூரில் இருந்து, கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன. வர்த்தகம் சூடுபிடித்துள்ளதால், பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

.கொரோனாவால், இரண்டு ஆண்டுகளாக, கேரளாவில் ஓணம் கொண்டாட்டமும், ஆடை வர்த்தகமும் களை இழந்தது. தொற்று பயம் விலகி விட்டதால், இந்தாண்டு ஓணம் கொண்டாட்டத்தில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பண்டிகையை முன்னிட்டு ஆடை வர்த்தகமும் களைகட்ட துவங்கிவிட்டது.

கேரள வர்த்தகர்கள், திருப்பூருக்கு நேரடியாக வந்து, ஓணம் விற்பனைக்கு தேவையான பின்னலாடை ரகங்களை அதிகளவில் கொள்முதல் செய்கின்றனர்.கொரோனா காலத்தில், திருப்பூர் நிறுவனங்கள் தயாரித்து அனுப்பிய ஆடைக்கான நிலுவை தொகைகளை வழங்கிவிட்டு, பண்டிகை கால ஆடைகளை எடுத்துச் செல்கின்றனர். இதனால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Next Story
ai in future agriculture