தீபாவளி நெரிசலில் சிக்கி தவித்த திருப்பூர்; பஸ்களில், ரயில்களில் நிரம்பி வழிந்த கூட்டம்
Tirupur News- திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் முண்டியடித்து ஏறிய மக்கள்.
Tirupur News,Tirupur News Today- தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. திருப்பூரில் தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. அவர்கள் கடைவீதிகளுக்கு சென்று ஷாப்பிங் செய்துவிட்டு இன்று மாலை சொந்த ஊர்களுக்கு கிளம்பினர். இதனால் திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரெயில்வே ஸ்டேஷனில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திருப்பூர் கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் தென் மாவட்டங்களுக்கும், திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பயணிகள் வரிசையாக செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. பஸ் ஸ்டாண்டுகளில் பஸ்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டு பயணிகளின் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்பட்டது.
அதுபோல் பஸ் ஸ்டாண்டில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சரி செய்தனர்.
அதுபோல் வெளி மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர். கூட்ட நெரிசலில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க ரயில்வே ஸ்டேஷனில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எளிதில் தீப்பற்றக்கூடிய வெடி உள்ளிட்ட பொருட்களை பயணிகள் பயணத்தின் போது எடுத்து செல்கிறார்களா என்பதை போலீசார் சோதனை செய்து அவற்றை பறிமுதல் செய்தனர். இன்று காலை முதலும் திருப்பூரில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரண்டு சென்றனர்.
திருப்பூரில் இருந்து சென்னை மற்றும் தென் மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இருப்பதற்கு இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணம்செய்தனர். அதேபோல் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களிலும் குடும்பமாக தங்களது சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாட செல்வதால் திருப்பூர் மாநகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu