அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்க திருப்பூர் போலீசார் தீவிரம்

Crime Prevention -பனியன் தொழில் நகரமான திருப்பூரில், பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்கள் மட்டுமின்றி மேற்குவங்காளம், ஒடிசா, உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும், வறுமை காரணமாக, பிழைப்பு தேடி திருப்பூருக்கு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில், இவ்வாறு திருப்பூர் வந்த வடமாநில தொழிலாளர்கள் பலரும், குடும்பத்துடன் திருப்பூரிலேயே தங்கி, திருப்பூர்வாசிகளாகவே தற்போது மாறிவிட்டனர்.
பனியன் நிறுவனங்கள், சாய ஆலைகள், ஓட்டல்கள், கட்டிட கட்டுமானம், பிளாட்பார வியாபாரம், தினசரி கூலி என, பல்வேறு விதமான பணிகளை செய்யும் தொழிலாளர்களாக, வடமாநில மக்கள் திருப்பூரில் பல ஆயிரக்கணக்கில் உள்ளனர்.
திருப்பூரில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த சில குற்றங்களில், வடமாநிலங்களை சேர்ந்த சிலரும் ஈடுபட்டது, போலீசார் விசாரணையில் தெரிய வந்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். குற்ற செயல்களில் ஈடுபட்ட சிலர், திருப்பூரில் வந்து பதுங்கி கொண்டு, தொழிலாளர்கள் என்ற போர்வையில், தலைமறைவாகி இருந்ததும், கண்டறியப்பட்டது. மேலும், நாளுக்கு ;நாள் திருப்பூருக்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
முக்கிய தொழில் நகரங்களில், தொழிலாளர் குறித்த விவரங்களை போலீசார், வருவாய்த்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை சேகரிக்குமாறு, தமிழக அரசும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருப்பூரில் வடமாநில தொழிலாளர் குறித்த முழு விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கன சாப்ட்வேர் ஏற்படுத்தி, அவ்விவரங்களை பதிவு செய்கின்றனர்.
திருப்பூரில் தங்கியுள்ள வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர் பற்றிய முழு விவரம், குடும்ப பின்னணி, கல்வி, குற்ற செயல்களில் ஈடுபட்டவரா என்பது பற்றிய தகவல்களை போலீசார் முழுமையாக சேகரிக்கின்றனர். வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், வாடகை விடுதிகள் மற்றும் அவர்கள் பணிசெய்யும் இடங்கள் என போலீசார் விவரங்களை நேரடியாக அவர்களிடம் சேகரிக்கின்றனர். இதுபோன்ற வடமாநில தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை தேடி தரும் அலுவலகங்கள் மற்றும் பணி ஒப்பந்ததாரர்கள் (கான்ட்ராக்டர்ஸ்) வாயிலாகவும், வடமாநில தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, விவரம் திரட்டப்படுகிறது. திருப்பூர் மாநகர பகுதியில், 25ஆயிரம் பேர், புறநகர் பகுதியில் 7ஆயிரம் பேர் என, இதுவரை 35ஆயிரம் பேர் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். தொடர்ந்து, விவரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.
போலீசார் கூறுகையில், தங்களது சொந்த மாநிலங்களில் போதிய வேலை வாய்ப்பின்றி, வருமானமின்றி வறுமை காரணமாக, வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், திருப்பூருக்கு வருவது வழக்கமாகி விட்டது. இதில், பெரும்பாலானவர்கள் வாலிபர்களாக உள்ளனர். மதுபழக்கம், தவறான நண்பர்கள் சகவாசத்தால் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உருவாகிறது. மேலும், அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான திருப்பூர், முக்கிய தொழில் நகரமாக விளங்குகிறது. எனவே, மக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக, இதுபோன்ற தகவல் சேகரிப்பு நடவடிக்கை அவசியமாகிறது, என்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu