திருப்பூரில், இரும்பு உருக்காலை கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்; போலீசார் விசாரணை

Tirupur News,Tirupur News Today-திருப்பூரில், இரும்பு உருக்காலை கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியில் இரும்பு உருக்காலை கழிவுகளை ஏற்றி வந்த லாரிக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் அனுமதியின்றி கழிவுகளை கொண்டு வந்த லாரியை, பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
திருப்பூர் பெருமாநல்லூர் சாலை மும்மூர்த்தி நகர் பகுதியில், வாகன எண் சரியாக தெரியாத நிலையில் வந்த சரக்கு வாகனத்தில் மர்ம பொருட்கள் இருப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் சிலர் வாகனத்தை சிறை பிடித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அந்த இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் வாகன எண் முறையாக இல்லாததால் வாகனத்திற்கு அபராதம் விதித்தனர். வாகனத்தில் கழிவுப் பொருட்கள் இருந்ததால், உடனடியாக சந்தேகத்தின் பேரில் தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக அந்த இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தார் ஆய்வு செய்ததில் வாகனத்தில் இரும்பு உருக்காலையில் இருந்து வெளிவந்த கழிவுகள் வைத்திருந்தது தெரியவந்தது. அந்த கழிவுகளை மும்மூர்த்தி நகர் பகுதியில் இருந்த பாறைக்குழியில் கொட்ட எடுத்து வந்ததும், ஈரோடு சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து கழிவுகள் கொண்டு வரப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால், அதற்கான எந்த ஒரு முறையான ஆவணங்களும் இல்லாமல் கழிவுகளை கொண்டு வந்ததும், தெரிந்தது.
இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் தாசில்தார் புகாரின் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கழிவு கொண்டு வந்த லாரியின் டிரைவர் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu