வனவிலங்கு பாதுகாப்பு; கல்லூரி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Tirupur news, Tirupur news today- வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி, மாணவ மாணவியர் முகமூடி அணிந்து, மனித சங்கிலி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Tirupur news, Tirupur news today- ஆண்டுதோறும் மார்ச் 3-ம் தேதி, உலக வனவிலங்கு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பறவைகளும், விலங்குகளும் மனிதன் தோன்றுவதற்கு முன்பே இந்த பூமியில் தோன்றியுள்ளது. தாவரங்கள் மற்றும் விலங்குகளில் உயிர் வாழ்வை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில், ஒரு மில்லியன் உயிரினங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டன. ஏறக்குறைய 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிந்து கொண்டு வருகின்றன. 8,000 வகைகள் அழியும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஐ.நா. அமைப்பு கடைப்பிடிக்கும் வறுமை ஒழிப்பு, நில வளங்களை பாதுகாப்பது மற்றும் நீடித்த வகையில் பயன்படுத்திக் கொள்வது போன்ற முயற்சிகளைப் போலவே, அழிவின் விழிம்பில் உள்ள உயிரினங்களை காப்பதற்கும் இந்த அமைப்பு உறுதி பூண்டுள்ளது.
எனவே, வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு உலக நாடுகளிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரிய வகை விலங்கு இனங்களும், அழியும் நிலையில் எண்ணிக்கையில் மிக குறைந்து போய் உள்ள வன விலங்குகளை பாதுகாப்பது, அவற்றின் உற்பத்தி அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து, வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இன்று, உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பாக இன்று கல்லூரி முன்பு வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி முகமூடி அணிந்தும், மனித சங்கிலி அமைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
வனச்சரக அலுவலர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3-ம் தேதி உலக வனவிலங்கு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது பூமியில் உள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், உலகின் காட்டு விலங்கினங்கள் மற்றும் தாவரங்களைப் பற்றிய விழிப்புணர்வை கொண்டாடுவதும் வளர்ப்பதும் இந்த நாளின் நோக்கம். பறவைகளும், விலங்குகளும் மனிதன் தோன்றுவதற்கு முன்பே இந்த பூமியில் தோன்றியுள்ளது. அவைகள் மனிதனை நம்பி வாழ்வது இல்லை.மனிதர்கள் தான் அவைகளை நம்பி வாழவேண்டும். ஆகையால் வன உயிரினங்களை பாதுகாப்பது நமது கடமை. மேலும் அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகளை பற்றி கூறினார்.
கல்லூரி மாணவ மாணவிகள் வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி முகமூடி அணிந்தும், மனித சங்கிலி அமைத்தும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu