திருப்பூர்; அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பராமரிப்பு பணி
Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் உள்ள ஒரு மாநகராட்சி பள்ளியில், சுவர்களுக்கு வெள்ளையடித்து பராமரிப்பு பணி நடக்கிறது.
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாநகரில் அரசு பள்ளிகளில், தனியார் பள்ளிகளில் பராமரிப்பு பணி வேகமாக நடந்து வருகிறது.
திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில், தனியார் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து, பள்ளிகளில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்புக்கு இன்னும் 3 வாரங்களே உள்ளன. ஜூன் முதல் வாரத்தில், கோடை விடுமுறைக்கு பின், மீண்டும் திறக்கப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், கடந்த 8ம் தேதி வெளியானது. இதைத்தொடர்ந்து, விரைவில் பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
அதைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்க உள்ளது. இதனால் அரசு பள்ளிகளில், பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணி பொதுநிதியை கொண்டு மேம்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிதி நிலைக்கு ஏற்ப பள்ளி நுழைவுவாசல், சுற்றுச்சுவர் மைதானம், வராண்டா, வகுப்பறை, கட்டிடங்கள், தினசரி இறைவணக்க கூட்டம் நடக்குமிடம், கலையரங்கம், நூலகம், ஆய்வு கூடம் உள்ளிட்ட கட்டிடங்கள் பழுதடைந்து இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். நிதிநிலைக்கு ஏற்ப பெயிண்ட், சுண்ணாம்பு பூச்சு பணிகளை தொடங்க வேண்டும். மின்கம்பி, கேபிள்களில் உரசும் வகையில் அல்லது மாணவர்கள் அதிகம் நடமாடும் பகுதியில் உயரமாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மிகவும் பழுதடைந்த, ஆபத்தான நிலையில் இருந்த வகுப்பறை கட்டிடங்களை உடனடியாக இடித்து அகற்றவும், அந்த கட்டிடங்களுக்கு பதிலாக, புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டவும், பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போல், குழந்தைகளுக்கு காலை உணவு, மதிய உணவு வழங்கப்படும் இடங்கள், சமையல் கூடங்களை நல்ல முறையில் பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய கல்வியாண்டு தொடங்கும்போது இந்த பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில் பராமரிப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது. அதே போல், தனியார் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை துவங்கப்பட உள்ள நிலையில் பள்ளிச் சுவர்களுக்கு வெள்ளையடிப்பது, பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu