திருப்பூரில் பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

திருப்பூரில் பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
X

tirupur News, tirupur News today- திருப்பூரில், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். 

tirupur News, tirupur News today- திருப்பூரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ. 2.09 லட்சம் கைப்பற்றப்பட்டது.

tirupur News, tirupur News today- திருப்பூரில் பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், ரூ. 2.09 லட்சம் கைப்பற்றப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் பத்திர பதிவுத்துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினா். கடந்த சில மாதங்களாக, அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஊழல் அதிகரித்து வருவதாக, வந்த புகார்களை அடுத்து, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, வருமானவரி துறை சார்பிலும், அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூா் நெருப்பெரிச்சலில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., தட்சிணாமூா்த்தி தலைமையிலான போலீசாா் சோதனை நடத்தினா். இதில் பணியில் இருந்த பதிவாளா், சாா் பதிவாளா்கள், ஊழியா்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.61 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனா்.

அதேபோல திருப்பூா் சிறுபூலுவபட்டியில் உள்ள வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினா். மேலும், வஞ்சிபாளையம் சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சொந்தமான மையத்துக்குச் சென்று, அங்கு பணியில் இருந்த வாகன ஆய்வாளா்கள், இடைத்தரகா்கள், வாகன ஓட்டிகளிடமும் சோதனை நடத்தினா்.இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.48 லட்சம் என மொத்தம் ரூ.2.09 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக ஆர்.டி.ஓ. மற்றும் பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள் 10 க்கும் மேற்பட்டோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூரை போன்ற தொழில் நகரங்களில் பணிபுரிய, அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் சிலர் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், பிற மாவட்டங்களில் இருந்து, திருப்பூருக்கு பணிபுரிய விரும்பி, இங்கு வந்து லஞ்சம், ஊழல் என லட்சக்கணக்கில் பணம் முறைகேடாக ஈட்டுவதாகவும் புகார்கள் இருந்து வருகிறது. வருமானத்தை மட்டுமே இலக்காக கொண்ட சில அரசுத்துறை அதிகாரிகள், அரசு சார்ந்த பணிகளைச் செய்ய ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த சூழலில், இன்று வட்டார போக்குவரத்து அலுவலகம், பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், ரூ. 2.09 லட்சம் கைபற்றப்பட்டுள்ளது.

போலீஸ், மின்வாரியம், மாநகராட்சி, மருத்துவ சுகாதாரத்துறை என, பல துறைகளிலும் சில அரசுத்துறை சார்ந்த சில அலுவலர்கள், ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் உள்ள நிலையில், இதுபோன்ற லஞ்ச ஒழிப்பு அதிரடி சோதனைகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business