ஊர்க்காவல் படை பணிக்கு, விண்ணப்பிக்க அழைப்பு

ஊர்க்காவல் படை பணிக்கு, விண்ணப்பிக்க அழைப்பு
X

Tirupur News. Tirupur News Today- ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்க அழைப்பு. (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- ஊர்க்காவல் படை பணிகளுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படை பணிகளுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தரப்பில், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

திருப்பூர் மாநகரில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆண், பெண் ஆகியோர் ஆளினர் பதவிக்கு நிரப்பப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கான விண்ணப்பத்தை திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பணியில் சேர 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 20 வயதிற்கு மேற்பட்டவராகவும், 45 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுடனும், நன்னடத்தை உடையவராகவும் இருக்க வேண்டும். எந்த அரசியல் அமைப்பைச் சார்ந்தவராகவும் இருக்கக்கூடாது. திருப்பூர் மாநகரப் பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் 24-ந் தேதிக்குள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது