திருப்பூரில் ரயில் மறியலுக்கு முயற்சித்த காங்., கட்சியினர் 291 பேர் கைது

திருப்பூரில் ரயில் மறியலுக்கு முயற்சித்த காங்., கட்சியினர் 291 பேர் கைது
X

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில், ரயில் மறியல் செய்ய கூட்டமாக வந்த காங்கிரஸ் கட்சியினரை, தடுத்து கட்டுப்படுத்திய போலீசார், 

Tirupur News. Tirupur News Today- மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 291 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து, திருப்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 291 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tirupur News. Tirupur News Today- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு மத்திய அரசை கண்டித்து திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை காங்கிரசார் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பு திரண்டு போராட்டத்துக்கு தயாராகினர். மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, ஈஸ்வரன், மாநிலச் செயலாளர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் திருப்பூர் டவுன்ஹால் அருகில் இருந்து ஊர்வலமாக கட்சிக்கொடிகளை ஏந்தியபடி ரயில்வே ஸ்டேஷன் நோக்கி கூட்டமாக வந்தனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து, கண்டன கோஷங்கள் எழுப்பினா். திருப்பூர் வடக்கு போலீசார் ரயில்வே ஸ்டேஷன் நுழைவுவாசலில் இரும்பு தடுப்புகளை அமைத்து யாரும் ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைய முடியாதபடி செய்தனர். இருப்பினும் காங்கிரஸ் கட்சியினர் தடுப்புகள் மீது ஏறி உள்ளே செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினா். இதனால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினா். 20 பெண்கள் உள்பட 141 பேர் கைது செய்யப்பட்டு பார்க் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதுபோல் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ரயில் மறியல் போராட்டம் இன்று மாலை திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன் நடந்தது. போராட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார். ரயில்வே ஸ்டேஷன் முன் சென்று போராட்டம் செய்தனர். பின்னர் வடக்கு போலீசார் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினா். இதில் 20 பெண்கள் உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது