திருப்பூர்; ஆயத்த ஆடை பொது பயன்பாட்டு மையத்தில் கலெக்டர் ஆய்வு

திருப்பூர்; ஆயத்த ஆடை பொது பயன்பாட்டு மையத்தில் கலெக்டர் ஆய்வு
X

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில், ஆயத்த ஆடை பொது பயன்பாட்டு மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Tirupur News. Tirupur News Today- பலவஞ்சிபாளையத்தில் உள்ள ஆயத்த ஆடை பொது பயன்பாட்டு மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு 52 குறு, சிறு, நடுத்தர பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களை ஒருங்கிணைத்து, பலவஞ்சி பாளையம் ரிங் ரோட்டில், ஆயத்த ஆடை பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது.ரூ.15.50 கோடி மதிப்பிலான இம்மையத்துக்கு மத்திய அரசு ரூ. 8.56 கோடி, மாநில அரசு ரூ. 3 கோடி மானியம் வழங்கியுள்ளன.

கட்டுமான பணிகள் முடிவடைந்து தைவான், சீனா, துருக்கி நாடுகளிலிருந்து அதிநவீன பிரின்டிங் மெஷின்கள் தருவிக்கப்பட்டு இம்மை யத்தில் நிறுவப்பட்டு வரு கிறது. அரசு மானியம் வழங்கியுள்ள நிலையில், பொது பயன்பாட்டு மையத்தில் கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

நிறுவப்பட்டுள்ள நவீன பிரின்டிங் மெஷின்கள், அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்ப ட்டது. மாவட்ட தொழில்மை ய மேலாளர் ராமலிங்கம், சிட்கோ மேலாளர் ஷர்மிளா, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் இணை உதவி இயக்குனர் ராஜேந்திரன் உடனிருந்தனர். பொது பயன்பாட்டு மைய தலைவர் ராமசாமி, நிர்வாக இயக்குனர் மோகனசுந்தரம், திட்ட ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் ஆகியோர் மைய செயல்பா டுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

இது குறித்து பொது பயன்பாட்டுமைய நிர்வாக இயக்குனர் மோகனசுந்தரம் கூறியதாவது,

ஆயத்த ஆடை பொது பயன்பாட்டு மையத்தில், அதிநவீன பிரின்டிங், எம்ப்ராய்டரி மெஷின்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இதுவரை 49 மெஷின்கள் நிறுவப்பட்டு மையம் செய ல்பாட்டை துவக்கியுள்ளது. இதனை பயன்படுத்தி பெரிய நிறுவனங்களுக்கு இணையாக குறு, சிறு, நடுத்தர பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களும், மிக எளிதாக ஆடைகளுக்கு மதிப்பு கூட்டுதல் அளிக்க முடியும். இதனால் புதிய சந்தை வாய்ப்புகள் கை கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா