‘சூப்’ விலை கேட்ட பனியன் தொழிலாளி அடித்துக்கொலை; இருவருக்கு ஆயுள் தண்டனை

‘சூப்’ விலை கேட்ட பனியன் தொழிலாளி அடித்துக்கொலை; இருவருக்கு ஆயுள் தண்டனை
X

Tirupur News. Tirupur News Today- பனியன் தொழிலாளியை அடித்துக்கொலை செய்த இருவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் சூப் விலை கேட்டதில் ஏற்பட்ட தகராறில் பனியன் நிறுவன தொழிலாளியை கொலை செய்த சூப் கடைக்காரர் உள்ளிட்ட 2 பேருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவு வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் கமலராஜன் (வயது 40). பனியன் நிறுவனம் ஒன்றில், கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2-8-2019 அன்று இரவு, திருப்பூர் கருவம்பாளையத்தில் உள்ள தனது மாமனார் கடைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு இரவு 10.30 மணி அளவில், ஆலாங்காட்டில் உள்ள சூப் கடைக்கு கமலராஜன் தனது மாமனாருடன் சூப் குடிக்க சென்றுள்ளார்.

கருவம்பாளையம், ஆலாங்காட்டை சேர்ந்த ராஜபாண்டி (23) என்பவரின் சூப் கடைக்கு சென்று, ‘சூப் விலை எவ்வளவு?’ என்று கமலராஜன் கேட்டபோது, ‘35 ரூபாய்’ என்று கூறியதும், ‘இவ்வளவு விலையா?’ என்று கூறியதில் ராஜபாண்டிக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜபாண்டி மற்றும் அவருடைய நண்பர்களான கருவம்பாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன் (27) மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட இளம் சிறார்கள் 2 பேர் என 4 பேரும் சேர்ந்து கமலராஜனை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்க்குள், கமலராஜனை தள்ளிவிட்டு கழிவுநீரில் வைத்து அமுக்கியதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து மத்திய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, ராஜபாண்டி, விஸ்வநாதன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கொலை செய்த குற்றத்துக்காக விஸ்வநாதன், ராஜபாண்டி ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். 2 சிறார்களின் வழக்கு தனியாக பிரித்து, வேறு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!