ஏப். 30க்குள் வரியை செலுத்தினால், 5 சதவீதம் போனஸ்; திருப்பூர் மாநகராட்சி அறிவிப்பு

ஏப். 30க்குள் வரியை செலுத்தினால், 5 சதவீதம் போனஸ்; திருப்பூர் மாநகராட்சி அறிவிப்பு
X

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- ஏப்ரல் 30-ம் தேதிக்குள், சொத்துவரியினை செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என, திருப்பூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.

Tirupur News. Tirupur News Today- இதுகுறித்து, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998-க்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 13.4.2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள்2023 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம்1998 பிரிவு 84(1)ல் அரையாண்டுக்கான சொத்துவரியினை முதல் 30 நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, 5 சதவீத ஊக்கத் தொகை அதிகபட்சமாக ரூ.5,000 வரை வழங்கப்படும்.

அதன்படி சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியினை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர். எனவே, ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சொத்துவரியினை செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும். சொத்துவரியினை, சொத்து உரிமையாளர்கள் செலுத்த பல்வேறு வகைகளான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், குரல் ஒலி அழைப்புகள், திருப்பூர் மாநகராட்சியின் அறிவிப்பு பலகைகளில் சொத்துவரி செலுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு செய்தி வெளியிடுதல், குப்பை அகற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தல், பண்பலை அலைவரிசை மூலம் சொத்துவரி செலுத்தக் கோரி ஒலிப்பரப்பு செய்தல், செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சொத்து உரிமையாளர்கள், சொத்துவரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரிவசூலிப்பாளர்கள், திருப்பூர் மாநகராட்சி அலுவலகங்களில் அமைந்துள்ள அரசு இ-சேவை மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும்வரை வோலை மூலமாகவும், திருப்பூர் மாநகராட்சி இணையதளம், NEFT and RTGS ஆகியவற்றின் மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை ஏப்ரல் 30 -ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகையினை பெற்றுக் கொள்ளலாம். மேலும், இதன்மூலம் திருப்பூர் மாநகரத்திற்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்கி உதவ வேண்டும், என மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!