திருப்பூரில் 14 நாட்கள் ‘ஸ்டிரைக்’; பாத்திர உற்பத்தி மீண்டும்துவக்கம்

Tirupur Strike Latest News
Tirupur Strike Latest News-திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட எவர் சில்வர் பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. தினமும் 25 முதல் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பாத்திரங்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
பாத்திர தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்த முறை நடந்த பேச்சுவார்த்தையில் 16 சதவீத கூலி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கூலி உயர்வை வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வியாபாரிகளுக்கு தெரிவிக்கும் வகையிலும், தொழில் மந்த நிலையில் இருப்பதாகவும் கூறி கடந்த 10-ம் தேதி பாத்திர உற்பத்தியை நிறுத்துவதாக எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதன் படி 14 நாட்கள் எவர் சில்வர் பாத்திர உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 லட்சம் ரூபாய் வீதம் 14 நாளில் 4 கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிக்கப்பட்டது.உற்பத்தி நிறுத்தப்பட்டு 14 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் உற்பத்தி தொடங்கியது.
இதுகுறித்து எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்க பொருளாளர் ராஜேந்திரன் கூறுகையில் கூலி உயர்வால், பாத்திரத்தின் விலை அதிகரித்துள்ளது என்பதை வெளி மாநில, மாவட்ட விற்பனையாளர் மற்றும் வியாபாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டோம்.உற்பத்தி நிறுத்தம் முடிந்து உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. வெளியூர் சென்ற தொழிலாளர்களை வேலைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம், என்றார்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பாத்திரங்கள் உற்பத்தியில் முன்னணி நகரமாக, திருப்பூர் அனுப்பர்பாளையம் விளங்கியது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்களுக்கு நிறைவான வாழ்க்கையை இந்த தொழில் ஏற்படுத்தி தந்தது. ஆனால் நாளடைவில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்ததால், மக்கள் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு மாறிவிட்டனர். இதனால், பட்டறை சத்தமாக ஒலிக்கும் அனுப்பர்பாளையத்தில் பாத்திர உற்பத்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. ஆயிரக்கணக்கில் இருந்த பட்டறைகளின் எண்ணிக்கை இன்று, 200க்கும் குறைவாக மாறிவிட்டது. அதிலும், இங்கு பாத்திர உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, பல்வேறு விதமான நெருக்கடிகளும், சிரமங்களும் உள்ளன. தொடர்ந்து பாத்திர உற்பத்தியில் ஈடுபட்டால், பல்வேறு உடல்சார்ந்த பிரச்னைகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர். நோய்வாய்ப்படுகின்றனர். இவற்றுக்கு எல்லாம், இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், பல்வேறு நெருக்கடியில் இந்த தொழில் நடந்து வருகிறது என, பாத்திர உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். எனினும், பல ஆண்டுகாலமாக இந்த தொழிலை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்கள், பொருளாதாரம் சார்ந்த கடும் சிரமங்களுக்கு மத்தியிலும், பாத்திர உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu