திருப்பூர் புதியதாக கட்டப்பட்ட மாநாட்டு அரங்க கட்டிடம்; இடத்தை தானமாக அளித்தவர் பெயரை வைக்க முடிவு

திருப்பூர் புதியதாக கட்டப்பட்ட மாநாட்டு அரங்க கட்டிடம்; இடத்தை தானமாக அளித்தவர் பெயரை வைக்க முடிவு
X

Tirupur News- திருப்பூர் மாநகராட்சி மாநாட்டு அரங்கு கட்டிடம் ( மாதிரி படம்)

Tirupur News- திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநாட்டு அரங்கத்துக்கு பெயரிடுவதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் திறக்கப்பட உள்ள புதிய மாநாட்டு அரங்கத்துக்கு, இதற்கான இடத்தை ஈந்த, ரங்கசாமி செட்டியாரின் பெயர் வைக்க வேண்டும் என்பதுதான் மாநகராட்சி நிர்வாகத்தின் நிலைப்பாடாக உள்ளது. ஏற்கனவே, அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்புகள் கோரிக்கை விடுத்தபடி ரங்கசாமி செட்டியாரின் பெயர் இதற்கு வைக்கப்படும் என்பது உறுதியாகிவிட்டது.

திருப்பூர் குமரன் ரோட்டில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த டவுன்ஹால் வளாகம் இடித்து அகற்றப்பட்டது. அங்கு 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 54 கோடி ரூபாய் செலவில், பல்வேறு வசதிகளுடன் புதிய அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

வாகன பார்க்கிங், கண்காணிப்பு கேமரா, லிப்ட், எஸ்கலேட்டர், கண்காட்சி அரங்கம், கூட்ட அரங்கம், டைனிங் ஹால், மாநாட்டு அரங்கம் உள்ளிட்டவற்றுடன் பிரம்மாண்டமான வளாகமாக ஏறத்தாழ 12 ஆயிரம் சதுரடி பரப்பில் இது அமைந்துள்ளது. வரும் 11ம் தேதி இது திறக்கப்பட உள்ளது.

இந்த இடத்தை பொதுப் பயன்பாட்டுக்காக தானமாக வழங்கிய ரங்கசாமி செட்டியார் என்பவர் நினைவாக, அங்கு கட்டப்பட்டு செயல்பட்டு வந்த டவுன்ஹால் வளாகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருந்தது.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் புதிய மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்ட நிலையில், இதற்கு இடம் வழங்கிய ரங்கசாமி செட்டியார் பெயரிலேயே இந்த புதிய வளாகமும் செயல்பட வேண்டும்; வேறு பெயர் வைக்க வேண்டாம் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அரசியல் கட்சிகள் சார்பிலும், மாநகராட்சி கவுன்சிலர் குழுக்கள் சார்பிலும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த அரங்கத்துக்கு பெயர் சூட்டுவது குறித்து பல விதமான கருத்துகள் வெளியானது.

இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது,

மாநாட்டு அரங்கத்துக்கு பெயர் சூட்டுவது குறித்து பல விதமான கருத்துகள் உலா வருகிறது. இதற்கு பெயர் சூட்டுவது குறித்து ஏற்கனவே மாநகராட்சி தரப்பில் அரசுக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உரிய துறைகளில் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் உரியஅனுமதி கடிதம் பெறப்படவுள்ளது.அனைத்து தரப்பினர் கோரிக்கை மட்டுமல்லாது, மாநகராட்சி நிர்வாகத்தின் நோக்கமும் இந்த அரங்கத்துக்கு, இடம் வழங்கிய பிரமுகரின் பெயர் வைக்க வேண்டும் என்பதுதான்.

அதில் எந்த குழப்பம், தயக்கம், வேறு பெயர் குறித்த சிந்தனை, நிர்ப்பந்தம் எதுவும் இல்லை.ரங்கசாமி செட்டியார் நினைவு மாநாட்டு அரங்கம் என்ற பெயர் சூட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil