tirupur fruit stall cash theft by rat அதிசயம் .....பழக்கடையில் தினமும் பணத்தை திருடிய எலி: கடைக்காரர் அதிர்ச்சி....படிங்க...

tirupur fruit stall cash theft by rat  அதிசயம் .....பழக்கடையில் தினமும் பணத்தை  திருடிய எலி: கடைக்காரர் அதிர்ச்சி....படிங்க...
X

ஆஹா....அடிச்சது லக்கி  ப்ரைஸ்.... சாப்பிட்டா ஏதாவது ஆகிவிடுமா? என சிந்திக்கிறார்  மிஸ்டர் எலியார் (கோப்பு படம்)

tirupur fruit stall cash theft by rat ஏங்க...எலின்னா பொருட்களை, துணிகளை, புத்தகங்களை சாப்பிட்டு ரணகளப்படுத்திவிடும் என்பதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனா பணத்தை திருடற எலியை பார்த்திருக்கீங்களா...படிங்க...


tirupur fruit stall cash theft by rat


திருப்பூர் பழக்கடையில் பணத்தை எடு்த்துச்செல்லும் எலி அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது. இது சிசிடிவி பதிவு

tirupur fruit stall cash theft by rat

திருப்பூர் பஸ்ஸ்டாண்டில் உள்ள பழக்கடையில் தினமும் பணம் திருடுபோனது.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கடைக்காரர் திருடுவது யார்? என்று விநோத முறையில் கண்டுபிடித்துள்ளார்.அந்த திருடன் யாருமே இல்லீங்க...அவருடைய கடையில் உள்ள எலிதான் பணத்தை திருடி பத்திரமா வேற இடத்துல வைத்திருந்ததை கடைக்காரர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

எலியா...பணத்தை திருடிச்சா...என்ன விநோதம்... எலி வாயில பேப்பர் கிடைச்சால அவ்வளவுதான் கட்...கட்..கட்.. பணம் மட்டும் இல்லீங்க எந்த பொருள் எலி வாயில கிடைச்சாலும் கடிச்சு குதறிப் போட்டு சின்னாபின்னமாக்கிவிடும் குணமுடையதுதாங்க எலி. ஒரு துணியைக் கொடுத்து பாருங்க...அதனை பல டிசைன் துணியா மாத்திடும்..இதனாலேயே வீடுகளில் எலியைப் பார்த்தாலே பல பெண்களுக்கு அலர்ஜியோ அலர்ஜிதாங்க..

tirupur fruit stall cash theft by rat


உள்ளே போலாமா...வேணாமா...ஏதாவது ஆபத்து காத்திருக்குமோ என யோசிக்கிறார் திருவாளர் எலி (கோப்பு படம்)

tirupur fruit stall cash theft by rat

நீங்க புலியைக் கூட பிடிச்சிடலாம்... ஆனா ஒரு எலியைப் பிடிக்கறது மட்டுந்தாங்க கஷ்டம்... இவ்வளவு ஏங்க...இந்த எலிக்கதைய வச்ச ஒரு சினிமாவே எடுத்துட்டாங்களே. சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடிகர் முரளியும் வடிவேலுவும் ஒரு எலியைப் பிடிக்கறதுக்குள்ள பாடாய் படுவார்கள்...அதுபோல் நம் வீட்டில் திருவாளர் எலி ஒருவர் நுழைந்துவிட்டால் போதும் அவ்வளவுதான் அந்த வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் துாக்கம் போச்சுங்க... இவரைப்பிடிக்கறதுக்கு முன்பெல்லாம் கூண்டு வைத்து அதில் அவருக்கு பிடித்தமான மசால்வடை, இறைச்சி இவற்றையெல்லாம் வச்சு பிடிப்பாங்க...அவரும் ஆசையா சாப்பிட வரும்போது அந்த கூண்டு தன்னாலே லாக் ஆகிவிடும் ... அப்புறம் சிறைதான். ஆனால் இப்ப இவர்களைப் பிடிக்க என்னென்னவோ மெதட் எல்லாம் சோஷியல் மீடியாவில வருதுங்க...இவர்களுடைய உறவினர்கள் எல்லோரும் தொபுக்கடீர் என பக்கெட்டிற்குள் விழுந்து இவர்களைப் பிடிப்பதற்கு நவீன உத்திகளையெல்லாம் நம்மாளுங்க கடைப்பிடிக்கறது ஆச்சர்யமா இருக்குதுங்க... அரிசி மற்றும் தானியக்குடோன்களில் வசிப்பவர்களைப் பிடிக்கத்தான் இந்த நவீன டெக்னிக்குங்க...

tirupur fruit stall cash theft by rat


ஆசையே துன்பத்துக்கு காரணம்... ஆசைப்பட்டா நாம அவ்வளவுதானா? என சிந்திக்கும் திருவாளர் எலி(கோப்பு படம்)

tirupur fruit stall cash theft by rat

எல்லாம்போயி எலி பேஸ்ட் என புதுசா இப்ப மார்க்கெட்டில்விக்கிறாங்க...அது எப்படின்னா எலி அந்த பேஸ்ட் மேலே நடந்தா அப்படியே உடம்பு பூரா ஒட்டிக்கும்...காலும் சேர்ந்து மாட்டிக்கும்...அதனால தப்பிக்க முடியாது... ஆனா ஒரு சில புத்திசாலி திருவாளர்கள் என்ன பண்றாங்க தெரியுமா-.. அந்த அட்டையோட ஓடிப்போயிடறாங்க.... மறு நாள் காலைல அட்டையைப் பார்க்க வர்றவங்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி....என்னா புத்திசாலித்தனம் பாருங்க...இப்படியும் இவங்க இனத்தில இருக்கிறாங்க...சரிவிஷயத்துக்கு வருவோம்... எலி... இது வீட்டில் உள்ள சாப்பிடும் பொருட்கள் துணிகளைத்தான் குறி வைக்கும்... பேப்பர் உள்ளிட்டவைகளைத் துண்டு துண்டாக கட் பண்ணி போட்டுடும். ஆனால் திருப்பூர் பஸ்ஸ்டாண்டில் பழக்கடை நடத்தி வருபவர் மகேஷ். இவரது கடையில் தினமும் கல்லாவில் வைத்து செல்லும் பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தினந்தோறும் நடக்கும் நிகழ்வாக இருந்ததால் இதனைக் கண்டுபிடிக்க அவர் ஒரு யுத்தியைக் கையாண்டார்.

யாருடா அது ? பணத்தை மட்டும் வந்த திருடிச்செல்வது ? இதனைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற நோக்கில் கடையில் சிசிடிவியைப் பொருத்தினார். அப்போதும் மறுநாள் வந்தால் பணம் மாயமாகிப்போயிருந்தது. சரி சிசிடிவியில் பதிவான காட்சிகளை அவர் பார்த்த போது பெரும் அதிர்ச்சியடைந்தார்.

tirupur fruit stall cash theft by rat


இது தாங்க.... எலி பேஸ்ட் அட்டை....இதுல எந்த விஐபி மாட்டினாலும் அவ்வளவுதாங்க..... டிக்கெட்டுதான்...(கோப்பு படம்) இதுலயும் பாருங்க ஜோடிப்பொருத்தமா....

tirupur fruit stall cash theft by rat

நம்ம திருவாளர் எலி அவர்கள் பழத்தின் வழியே வேகமாக வந்து கீழே வைத்திருக்கும் கல்லாவில் இருந்த ரூபாய் நோட்டுகளை வாயில் கவ்விச்சென்றதைக் கண்டு கடைக்காரர் மகேஷ் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் துப்பறியும் வேலையில் ஈடுபட்டார். திருவாளர் எலியின் இருப்பிடத்தைக் கண்டறிய முற்பட்டு பழங்கள் அனைத்தையும் கலைத்து இடத்தினைக் கண்டறிந்த போது இவர் கல்லாவில் இருந்து தினமும் காணாமல் போன பணம் அங்கு பத்திரமாக இருந்ததைக் கண்டு மகிழ்ச்சியுற்றார். ரூ. 1500 இருந்தது சேதாரம் இல்லாமல் தொலைந்த பணத்தை மீட்டார்.

பாருங்க ...பழத்தை திருடுற எலியைத்தான் பார்த்திருக்கோம்... ஆனா நம்ம திருவாளர் எலி பணத்தை திருடிச் சென்று அதனை எந்தவித சேதாரம்இல்லாமல் பாதுகாப்பாக தன் வளைக்குள் வைத்திருந்ததால் கடைக்காரர் மகேஷ் போலீசை வரவழைக்கவில்லை... எலியிலும் நல்ல எலி இருக்கத்தான் செய்யுது நாட்டில என மனதில் சொல்லிக்கொண்டு தன் வியாபார வேலையைத் துவக்க ஆரம்பித்தார்... இந்த விஷயம் அருகிலுள்ள கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு தெரியவந்தபோது பெரும் ஆச்சர்யமுற்றனர். நல்ல எலி...தாங்க போங்க...ஆனா கிளைமேக்ஸ் அவர் எஸ்கேப்புங்க...

Tags

Next Story