திருப்பூர் பூ மார்க்கெட்; மல்லிகை கிலோ ரூ. 400

திருப்பூர் பூ மார்க்கெட்; மல்லிகை கிலோ ரூ. 400
X

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் பூ மார்க்கெட்டில், நேற்று மல்லிகைப்பூ விலை கிலோ ரூ. 400 ஆக இருந்தது.(கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள பூ மார்க்கெட்டில், நேற்று மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tirupur News. Tirupur News Today- தற்போது சித்திரை மாதம் முடிந்து, வைகாசி மாதம் துவங்கியுள்ளது. வைகாசி மாதம் என்றாலே திருமணம், புதுமனை புகுவிழா, காதுகுத்து, கோவில் விசேஷங்கள், குல தெய்வ கோவில் வழிபாடுகள் உள்பட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறும். சுப நிகழ்ச்சிகளில் பூக்கள் முக்கிய பங்கு வகிப்பதால் இந்த மாதம் பூக்களின் விலை அதிகமாக இருக்கும். இன்று (திங்கட்கிழமை) சுபமுகூர்த்த தினம் என்பதால் நேற்று திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் பூ வாங்க மக்கள் அதிகமாக வந்திருந்தனர். மேலும் கடந்த வாரம் ரூ.300-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ நேற்று கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பூக்களின் விலை நிலவரம்

பூ மார்க்கெட்டில் நேற்று விற்கப்பட்ட பூக்களின் விலை விவரம் (1 கிலோவிற்கு) வருமாறு:

மல்லிகைப்பூ ரூ.400, முல்லைப்பூ ரூ.200, சாதிப்பூ ரூ.120, கனகாம்பரம் ரூ.320, அரளி பூ ரூ.100, சம்பங்கி ரூ.40, கோழிக்கொண்டை ரூ.80, செண்டு மல்லி ரூ.50 ஆகிய விலைகளில் விற்கப்பட்டது. அதுபோல் ஒரு தாமரைப்பூ ரூ.10-க்கு விற்கப்பட்டது. பூக்களின் விலை குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில் "வைகாசி மாதம் ஆரம்பம் என்பதால் பெரிய அளவில் பூக்களின் விலை உயரவில்லை. இனி வருகிற முகூர்த்த தினங்களில் பூக்கள் விலை அதிகமாக உயர வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்தார்.

திருப்பூருக்கு ஈரோடு, சத்தியமங்கலம், ஊட்டி மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பூக்களின் வரத்து காணப்படுகிறது. தொடர் மழை காரணமாக, குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து பூக்களின் வரத்து குறைந்துள்ளதாகவும் பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்