திருப்பூர் சைபர் க்ரைம் ஏ.எஸ்.பிக்கு பிடிவாரண்ட்; மகிளா கோர்ட் உத்தரவால் பரபரப்பு

திருப்பூர் சைபர் க்ரைம் ஏ.எஸ்.பிக்கு பிடிவாரண்ட்; மகிளா கோர்ட் உத்தரவால் பரபரப்பு
X

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் சைபர் க்ரைம் ஏ.எஸ்.பிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, மகிளா கோர்ட் உத்தரவு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில், கூடுதல் எஸ்.பி யாக பணிபுரியும் கிருஷ்ணசாமிக்கு, பிடிவாரண்ட் பிறப்பித்து, நீலகிரி மகிளா கோர்ட் உத்தரவிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

Tirupur News,Tirupur News Today- நீலகிரி மாவட்டம், தேவாலா அருகே பெருங்கரையில் உள்ள உப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகேஷ். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு திடீரென தமிழ்ச்செல்வி தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் நாகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, கோர்ட் ஜாமீன் வழங்கியது.

மேலும் இதுகுறித்த வழக்கு விசாரணை, ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை தற்போது விறுவிறுப்பாக நடந்து, முக்கிய கட்டத்தை எட்டி வருகிறது. மேலும் சாட்சிகளிடம் விசாரணை முடிந்த நிலையில், இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் வழக்கு விசாரணை அதிகாரியான அப்போதைய தேவாலா போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்த கிருஷ்ணசாமி, ஊட்டி கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டி உள்ளது.

இதுதொடர்பாக தற்போது திருப்பூர் சைபர் க்ரைம் பிரிவில் கூடுதல் போலீஸ் எஸ்.பி ஆக பணியாற்றி வரும் அவருக்கு, 7 முறை சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் அவர் வழக்கு நடக்கும் ஊட்டி மகளிர் கோர்ட்டில் நேரில் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் போலீஸ் எஸ்.பி கிருஷ்ணசாமி நேரில் கோர்ட்டில் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மகிளா கோர்ட் நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவு பிறப்பித்தார். இது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக மருத்துவ விடுப்பில் இருந்த கிருஷ்ணசாமி நேற்று பணிக்கு வந்த நிலையில், அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story