திருப்பூர் மாநகராட்சி 4வது கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள்டிசம்பருக்குள் முடியும் :அமைச்சர் தகவல்
Tirupur News- திருப்பூர் மாநகராட்சி 4வது கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தாா்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாநகராட்சி 4வது கூட்டுக் குடிநீா் திட்டப்பணிகள் வரும் டிசம்பா் இறுதிக்குள் நிறைவடையும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ரூ.1,120.57 கோடி மதிப்பீட்டில் திருப்பூா் மாநகராட்சிக்கான 4 ஆவது கூட்டுகுடிநீா் திட்ட நீரேற்று நிலையத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறியதாவது,
திருப்பூா் மாநகராட்சியில் 4வது கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் ரூ.1,120.57 கோடி மதிப்பீட்டில் 6 பகுதிகளாக நடைபெற்று வருகின்றன. இதில், ஒரு நீரேற்று நிலையம், ஒரு குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், 144 கிலோ மீட்டா் தொலைவுக்கு குடிநீா் ஈா்ப்பு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் மொத்தம் உள்ள 29 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் 21 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளின் பணிகள் நிறைவடைந்து நீரேற்றம் செய்யப்பட்டுள்ளது. 95 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் வரும் டிசம்பருக்குள் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இத்திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது ஒருவருக்கு 135 லிட்டா் குடிநீா் வழங்கப்படும். அடுத்த 30 ஆண்டுகளுக்கு பயன்பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது, என்றாா்.
இதைத்தொடா்ந்து, அன்னூா் வட்டம், ஒட்டா்பாளையத்தில் 4 ஆவது கூட்டுகுடிநீா் திட்ட சுத்திகரிப்பு நிலையம், பாவனி சாகா் வடிநிலக்கோட்டம், ஓடந்துறை கிராமத்தில் பாவனி ஆற்றின் குறுக்கே ரூ.24.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணியையும் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ், மேயா் தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் கிரியப்பனவா், துணை மேயா் பாலசுப்பிரமணியம், மாநகாட்சி பொறியாளா்கள் மற்றும் நீா்பாசனத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu