திருப்பூர், அவினாசி பகுதிகளில் கனமழை - தாழ்வான இடங்களை சூழ்ந்த வெள்ளம்

திருப்பூர், அவினாசி பகுதிகளில் கனமழை - தாழ்வான இடங்களை சூழ்ந்த வெள்ளம்
X

திருப்பூர் அருகே வஞ்சிபாளையம் பகுதியில் கனமழை பெய்தது.

திருப்பூர், அவினாசி சுற்றுப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது.

கடந்த இரு தினங்களாக திருப்பூரில், பகல் நேரத்தில் வெயில் தலைகாட்டினாலும், மாலை நேரங்களில் வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. அதுபோலவே, இன்றும் பகல் நேரத்தில் வெயில் அடித்தது. எனினும், திருப்பூர் நகரம், மற்றும் புற நகர் பகுதிகளில் இன்று மாலையில் கருமேகங்கள் சூழ்ந்தன. சிறிது நேரத்தில் கனமழை பெய்யத் தொடங்கியது.

இந்த மழை, மாலை 4:30 மணியளவில் பெய்யத் தொடங்கி, முக்கால் மணி நேரம் வரை நீடித்தது. திருப்பூர் நகரம், பூண்டி, அனுப்பர்பாளையம், மற்றும் சுற்றுப்புற பகுதிகளான மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது; சாலைகளில் வெள்ளம் ஆறு போல ஓடியது.

அவினாசியில் மழை

இதேபோல், அவினாசி சுற்றுப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. குறிப்பாக, அவினாசி நகரம், சேவூர், கருவலூர், கைகாட்டி புதூர், வஞ்சிபாளையம், புதுப்பாளையம், கணியாம்பூண்டி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. தற்போதைய மழையால் நீர் நிலைகள் நிரம்பும்; நிலத்தடி நீர்மட்டம் உயரும், விவசாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் கூறினர்.

Tags

Next Story
ai as the future