திருப்பூரில் மோட்ச தீபம் ஏற்றி பிபின் ராவத்திற்கு பாஜகவினர் அஞ்சலி

திருப்பூரில் மோட்ச தீபம் ஏற்றி பிபின் ராவத்திற்கு பாஜகவினர் அஞ்சலி
X

திருப்பூர் மாநகராட்சி அருகே நடந்த நிகழ்வில், மோட்ச தீபம் ஏற்றி பிபின் ராவத் உள்ளிட்டோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பாஜகவினர். 

திருப்பூரில், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோரின் வீர மரணத்திற்கு, வடக்கு மாவட்ட பாஜக சார்பில், மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 வீரர்கள், குன்னூர் அருகே நேற்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இது, நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியது. பல்வேறு தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுதவிர, ஆங்காங்கே தன்னெழுச்சியாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், தொண்டு அமைப்புகளும், மாணவ, மாணவியரும், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோரின் மறைவுக்கு, கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாஜகவினர் மட்டுமின்றி, பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு, வீரமரணம் அடைந்த ராணுவத்தினருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில், இன்று மாலை மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த அஞ்சலி கூட்டத்தில், பிபின்ராவத்தின் தியாத்தை, பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் நினைவு கூர்த்தனர். பின்னர் மோட்ச தீபம் ஏற்றி, மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில், பாஜகவினர் மட்டுமின்றி பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு, உயிர்த்தியாகம் புரிந்த ராணுவத்தினருக்கு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்