திருப்பூர் இஎஸ்ஐ ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் இல்லாததால் தொழிலாளர்கள் பாதிப்பு
திருமுருகன்பூண்டி பகுதியில் 81.34 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை தோற்றம் .
Tiruppur ESI Hospital Inconvenience
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதியில் 81.34 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை கடந்த 25ம் தேதி காணொளி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியில் உள்ள தொழிலாளர்கள் இந்த மருத்துவமனை மூலம் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.மேலும் இந்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதி,32 மருத்துவப் பணியாளர்கள் மற்றும் குடியிருப்புகள், ஆப்ரேஷன் தியேட்டர், மருத்துவர்கள் அறை, நோயாளிகள் தங்கும் அறை என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மொத்தம் 81.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சிறப்பு கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திறப்புவிழா கொண்டாடிய நிலையில் திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இனி கோவை சிங்கநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையை தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை என நினைத்து சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளுக்கு மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே, காரணம் இந்த இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களோ பணியாளர்களோ இல்லை என்பதுடன் போதிய உபகரணங்களும் அமைக்கப்படாமல் உள்ளது இதனால் மீண்டும் எக்ஸரே, ஸ்கேன், ரத்த ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் கோவைக்கு அனுப்பும் நிலை இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் இது மட்டுமின்றி, சிறப்பு டாக்டர்களும் பணியில் நியமிக்கப்படாமல் உள்ளதால் பொதுமருத்துவர் எழுதிக்கொடுக்கும் மருந்துகளை மட்டும் பெற்றுக்கொண்டு நோயாளிகள் ஏமாற்றத்துடன் செல்லவேண்டி உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்
இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறுகையில் திறப்புவிழா முடிந்துள்ளது சாதாரண மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுவருகிறது ஓரிரு மாதங்களில் போதுமான மருத்துவ உபகரணங்களும், மருத்துவர் உள்ளிட்ட ஊழியர்களும் நியமிக்கப்பட்டுவிடுவார்கள் பின்னர் முழு அளவிலான சிகிச்சையை திருப்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையிலேயே தொழிலாளர்கள் பெறமுடியும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu