திருப்பூரில் திமுக சார்பில் நீர்மோர்ப்பந்தல் திறப்பு

திருப்பூரில் திமுக சார்பில் நீர்மோர்ப்பந்தல் திறப்பு
X

புஷ்பா நகரில் நீர்மோர்ப்பந்தலை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். 

திருப்பூர் புஷ்பா நகரில், திமுக சார்பில் நீர்மோர்ப்பந்தல் திறக்கப்பட்டது.

கோடை காலம் தொடங்கியுள்ளதால், ஆங்காங்கே நீர்மோர்ப் பந்தல்கள் திறக்கப்படுகின்றன. அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி 50 வது வார்டு புஷ்பா நகர் பகுதியில், திமுக சார்பில் நீர்மோர்ப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர பொறுப்பாளர் டிகேடி நாகராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!