திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விளக்கேற்றி மக்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு
Tirupur News- திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விளக்கேற்றி போராட்டம் நடத்திய மக்களை, போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் பல்லடம் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இங்கு மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகளை குறைகளை தெரிவிக்க இங்கு வருகின்றனர். மக்கள் வந்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனுக்களை அளித்து வருகின்றனர். இன்றும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.
திருப்பூர் அடுத்துள்ள பூமலூர் கோகுல் கார்டன் பகுதியை சேர்ந்த பொது மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது திடீரென தங்கள் பகுதிக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர கோரி தாங்கள் கொண்டு வந்த விளக்குகளை ஏற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். இதில் பெண்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,
பூமலூர் ஊரட்சிக்கு உட்பட்ட பூமலூர் கிராமம் கோகுல் கார்டன் பகுதியில் 250 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்றத்தலைவரிடம் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு மின்விளக்கு, சாக்கடை வசதி செய்து தரக்கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொது மக்களின் இந்த கோரிக்கையை ஏற்று எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu