திருப்பூரில் பூக்களின் விலை கிடு, கிடு உயர்வு; மல்லிகைப் பூ கிலோ ரூ. 1000க்கு விற்பனை

திருப்பூரில் பூக்களின் விலை கிடு, கிடு உயர்வு; மல்லிகைப் பூ கிலோ ரூ. 1000க்கு விற்பனை
X

Tirupur News- திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கணிசமாக உயர்வு (கோப்பு படம்)

Tirupur News- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருப்பூரில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ. 1000 என்ற விலையில் விற்கப்பட்டது.

Tirupur News,Tirupur News Today- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் நேற்று பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை திடீரென அதிகரித்தது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.320 -க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.1000-ம் ஆக அதிகரித்தது. இதேபோல் ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப் பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஜாதி மல்லி ரூ.600-க் கு விற்பனை செய்யப்பட்டது. இதைத் தவிர பிற பூக்களின் விலை வழக்கம்போல் காணப்பட்டது.

சம்பங்கி ரூ.40, பட்டு பூ ரூ.50, செவ்வந்தி ரூ.30 முதல் ரூ.40, அரளி ரூ.150 முதல் ரூ.200, ரோஜா பூ ரூ.120 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.இவ்வாறு மல்லி முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை அதிகரித்த போதிலும் பண்டிகையை கருதி பொதுமக்களும் வியாபாரிகளும் பூக்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.இதனால் பூ மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை மும்முரமாக நடந்தது. மழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

நாளை மறுதினம் திங்கள் முதல் கந்த சஷ்டி விழா துவங்க உள்ளது. ஒரு வார காலத்துக்கு முருக பக்தர்கள், சஷ்டி விரதம் இருந்து தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் முருகப் பெருமானுக்கு பூஜைகள் செய்து கந்த சஷ்டி பாட்டு பாடி விரதம் இருப்பர். அதன்பின், திருக்கல்யாணம் நடந்த பிறகு தங்களது சஷ்டி விரதத்தை நிறைவு செய்வது வழக்கமாக உள்ளது. அதனால், வரும் நாட்களில் அதன் காரணமாகவும் பூக்களின் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் சில பூ வியாபாரிகள் கூறினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!