கடந்த நிதியாண்டில் தமிழக அளவில் ஏற்றுமதி; மூன்றாமிடம் வென்ற திருப்பூர்

கடந்த நிதியாண்டில் தமிழக அளவில் ஏற்றுமதி; மூன்றாமிடம் வென்ற திருப்பூர்
X

Tirupur News,Tirupur News Today-கடந்த நிதியாண்டில், ஏற்றுமதியில் மூன்றாமிடம் பெற்ற திருப்பூர் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- கடந்த நிதியாண்டில் நடந்த ஏற்றுமதியில், தமிழக அளவில் திருப்பூர் மூன்றாமிடத்தை பிடித்துள்ளது.

Tirupur News,Tirupur News Today- மத்திய அரசின் தகவல் அடிப்படையில் மாநில அரசு, மாவட்டம் வாரியாக ஏற்றுமதி வர்த்தக விவரங்களை பராமரிக்கிறது. இந்நிலையில் கடந்த நிதியாண்டுக்கான(2022-23) ஏற்றுமதி வர்த்தக விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 2021-22ம் ஆண்டில் 2லட்சத்து 62 ஆயிரத்து 323 கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் ஏற்றுமதி வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 711 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மாநில அளவில் காஞ்சிபுரம் முதலிடத்திலும், சென்னை இரண்டாமிடத்திலும் இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் 3-ம் இடத்தில் உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2021-22ம் ஆண்டில் ரூ.35 ஆயிரத்து 834 கோடி அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. கடந்த நிதியாண்டில்(2022-23) ரூ.36 ஆயிரத்து 419 கோடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும் முந்தைய ஆண்டில் 13.70 சதவீதமாக இருந்த திருப்பூரின் மாநில அளவிலான பங்களிப்பு 11.10 சதவீதமாக குறைந்துள்ளது.

பருத்தி நூலிழை 'டி- சர்ட்' வகைகள் - ரூ.8,396 கோடி , குழந்தைகளுக்கான பருத்தி நூலிழை பின்னலாடைகள் - ரூ.3,790 கோடி , பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை நூலிழை 'டி-சர்ட்'கள்-ரூ. 2,493 கோடி , இரவு அணியும் பருத்தி பின்னலாடைகள் மற்றும் பைஜாமா ஆடைகள் - ரூ. 1,933 கோடி , இரவு அணியும் சட்டைகள் மற்றும் பைஜாமா- ரூ.1,288 கோடி, டி-சர்ட் அல்லாத பனியன் துணியில் தயாரித்த சட்டை வகைகள் ரூ.1,075 கோடி, உல்லன் மற்றும் உரோமத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டிய குழந்தைகள் பின்னலாடைகள் -ரூ. 806 கோடி ,பருத்தி நூலிழையில் தயாரித்த 'டிரவுசர்'கள், 'ஷார்ட்ஸ்' கள்-ரூ. 805 கோடி, பருத்தி நூலிழையிலான இதர பின்னலாடைகள் - ரூ.705 கோடி, செயற்கை நூலிழை உள்ளாடைகள் ரூ.688 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும் 14 ஆயிரத்து 541 கோடி ரூபாய்க்கு இதர பின்னலாடை ரகங்கள், ஆயத்த ஆடைகள் மற்றும் 'ஆக்டிவேட்டட் கார்பன்' வகைகள், வேளாண் பொருட்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்