திருப்பூரில் மாணவியை பாலியல் தொல்லை செய்தவர், போக்சோ சட்டத்தில் கைது

திருப்பூரில் மாணவியை பாலியல் தொல்லை செய்தவர்,  போக்சோ சட்டத்தில் கைது
X

திருப்பூரில் பள்ளி மாணவியை பாலியல் தொல்லை செய்த பனியன் கம்பெனி டெய்லரை, மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

POCSO Act Sections- திருப்பூரில் பள்ளி மாணவியை பாலியல் செய்த பனியன் கம்பெனி டெய்லரை, மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

POCSO Act Sections- திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, கோல்டன் நகர், கருணாகரபுரியை சேர்ந்தவர் தாமோதரன், அங்குள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக வேலை செய்தார். அதே பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை, தாமோதரன் காதலித்துள்ளார். அடிக்கடி மாணவியை சந்தித்து, தொல்லை செய்துள்ளார். இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர், தாமோதரனை எச்சரித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தாமோதரன், வீட்டில் தனியாக இருந்த மாணவியை, பாலியல் தொல்லை செய்து துன்புறுத்தியுள்ளார்.இதுகுறித்து, திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், தாமோதரனை கைது செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai in future agriculture